Saturday, April 18, 2015

கடலில் கலந்த லிபிய அகதிகள் !!!


லிபியாவிலிருந்து வெளியேறிய நானூறு அகதிகள்கடந்த வாரயிறுதியில் அவர்களது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்து போனதாக செய்திகளில் அறிவிக்கப்பட்டனஅந்த கப்பல் மூழ்கிய போது 550 பேர் வரையில் அதில் இருந்ததாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்ததை இத்தாலியின் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒரு செய்தி தொடர்பாளர் Agence France-Presse க்கு தெரிவித்தார்இதுவரையில் சுமார் டஜன் கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அல்-காயிதா இப்போது என்ன செய்ய போகிறது...- ஒரு சமகால பார்வை!!

 

“இஸ்லாமிக் ஸ்டேட்”. இன்று உலகின் எல்லா மீடிாயக்களும் தினமும் பேசும் வார்த்தை இது. இஸ்லாமிய அரசை பார்த்து சீ.ஐ.ஏ.யின் ஏஜென்ட்கள் என்றார்கள். மொஸாட்டின் மேஷனரி என பிரச்சாரம் செய்தார்கள். இப்போது அவை பொய்த்துப்போயுள்ளமை காலத்தின் நிதர்சனங்கள். அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியகிழக்கு நாடுகள், இந்த நாடுகளின் தயவை நாடிநிற்கும் ஏனைய நாடுகள் என எல்லோருமே இவர்களிற்கு எதிராக ஒரு அணியில் நிற்கின்றனர். தங்கள் புரபகண்டா தோல்வி கண்ட நிலையில் இப்போது மனித குலத்தின் எதிரிகளாகவும் பிற்போக்குத்தனமான பயங்கரவாதிகளாகவும் அவர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு உளவியல் “சிப்” எல்லோர் உள்ளங்களிலும் விதைக்கப்படுகிறது. அது என்னவென்றால் “ஐ.எஸ். உங்கள் வாயில் கதவுகளை தட்டும் போது நீங்கள் பிணமாக்கப்படுவீர்கள். உங்கள் பெண்களை அவர்கள் கைது செய்து கொண்டு சென்று தங்கள் இச்சைகளை தீர்த்து விட்டு அடிமைச் சந்தையில் விற்றுவிடுவார்கள். உங்கள் மதஸ்தலங்களை தரைமட்டமாக்குவார்கள். உங்கள் குழந்தைகளை பிடித்துச் செல்வார்கள் இல்லை அந்த இடத்திலேயே சுட்டுத் தள்ளுவார்கள். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ?!!”. இப்படிச் சொன்னால் யாருக்குத்தான் பயம் வராது. . 

Friday, April 17, 2015

போர் பதட்டங்களைத் தீவிரப்படுத்தும் நேட்டோ, ரஷ்ய விமான இடைமறிப்புகள்

 
கடந்த வாரம் ரஷ்யாவின் எல்லையை நோக்கி பறந்து வந்த ஓர் அமெரிக்க உளவுவிமானத்தை ரஷ்யாவின் போர் விமானம் இடைமறித்ததன் மீதான ஒருபிரச்சினைகிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க-நேட்டோ கட்டமைப்பால்தூண்டிவிடப்பட்டு அதிகரித்துவரும் போர் பதட்டங்களை அடிக்கோடிடுகிறது

ஒரு மனிதனின் மரணம்...!!

 
Al Mukalla கிழக்கு யெமனிய மாகாணமான ஹத்ரமவ்தின் கடற்கரை நகர். கடந்த ஏப்ரல் 02-ம் திகதி அல்-காயிதா போராளிகள் அதன் மத்திய சிறைச்சாலையை சடுதியாக தாக்கி அங்குள்ள தங்கள் கொமாண்டர்கள் சிலரையும் பல நூறு போராளிகளையும் மீட்டுச் சென்றிருந்தனர். 2012-ல் யெமனிய இராணுவம் மேற்கொண்டபாரிய இராணுவ நடவடிக்கை காரணமாக அல்-காயிதா அதன் பலம்வாய்ந்த பிராந்தியங்களான  Abyan, Shabwa என்பவற்றின் தனது ஆதிக்கத்தை இழந்திருந்தது. ஆனால் அவர்கள் Hadramout-ல் தமது கட்டுப்பாட்டை இழக்கவில்லை. உஸாமா பின் லாதின் (ரஹ்) அவர்களால் நேசிக்கப்பட்ட தளம் அது. என்ன சென்டிமென்டோ தெரியாது அவர்கள் அதனை தக்க வைக்க நிறையவே விலை கொடுத்திருந்தனர். அல்-முகல்லா நகர் வெற்றிக் கொண்டாட்டங்கள் அந்த பிராந்தியம் முழுதும் நிகழந்து வந்தன. இவை போதாதா அமெரிக்க உளவமைப்புகளிற்கு...

Thursday, April 16, 2015

S-300 எயார் டிபன்ஸ் சிஸ்டம் - ஈரான் ரஷ்ய கூட்டின் அதிர்வலைகள்..!!

ரானிய அரசாங்கத்திற்கு அதிநவீன S-300 வான் பாதுகாப்பு ஏவுகணைஅமைப்புமுறையை வழங்குவதன் மீதிருந்த ஒரு தடையை நீக்கிரஷ்யஜனாதிபதி விளாடிமீர் புட்டினால் திங்களன்று கையெழுத்திடப்பட்டசட்டஆணைக்கு வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் இரண்டும் கண்டனம்தெரிவித்துள்ளன.

Wednesday, April 15, 2015

Hillary on Gaddafi - "we came, we saw, he died." laughing? What an Embarrassment..!!


Israel started it all BBC documentary..!!


Trustworthy?


Paradise Stolen: The Myth of Terrorism


America : Freedom to Fascism...!!!


முஸ்லிம் பிணக்காடுகளில் விளையாடும் அமெரிக்க குழந்தைகள் ......!!

வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகனில் இருந்து வெளியான அறிக்கைகளின்படிஅமெரிக்க அரசாங்கம் இந்த வாரம் எகிப்து மற்றும் பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆயுத உபகரணங்களை விற்க உள்ளது.
வெள்ளைமாளிகை செய்தியின்படிஎகிப்திற்கு சுமார் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ஹெல்பயர் II ரக ஏவுகணைகளின் ஓர் ஆரம்ப பரிவர்த்தனையானதுஒரு "பாதுகாப்பான மற்றும் நிலையான எகிப்தை"உறுதிசெய்யும் நோக்கத்துடன்எகிப்திய இராணுவ தளவாடங்களை"நவீனமயமாக்கும்அமெரிக்காவின் புதிய முயற்சிகளது தொடக்கத்தை குறிக்கும்மட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் ஒருசில ஆயுத அமைப்புமுறைகளின் மீது,அக்டோபர் 2013 இல் அமெரிக்க நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டிருந்த"கூடுதல் அதிகாரத்தின் கீழ் நிறுத்திவைப்பைஅவர் முடிவுக்குக் கொண்டு வருவதாக தகவல் வழங்கஒபாமா எகிப்திய இராணுவ ஆட்சியாளர் அப்தெல் பத்தாஹ் அல் சிசி உடன் மார்ச் 31 அன்று தொலைபேசியில் பேசினார்.

யெமனிற்கு எதிரான அமெரிக்க சவுதி கூட்டு குற்றம் - விரியும் அமெரிக்க ஆயுதச் சந்தை..!!

யெமனுக்கு எதிரான குண்டுவீச்சு அதன் மூன்றாவது வாரத்தில் நீடிக்கின்ற வேளையில்ஒபாமா நிர்வாகம் ஒரு பாரிய மனிதயின பேரழிவை விரைவுபடுத்த அச்சுறுத்தும் ஒரு சட்டவிரோத போரை உருவாக்கும் வகையில் நேரடியான அமெரிக்க தலையீட்டை அதிகரித்துள்ளது.

தயாராகும் சவுதியின் தரைப்படை - அரபு வசந்தம் மதீனத்து வீதிகளை நோக்கி...!!

 
யெமன் மீதான வான்தாக்குதல்கள் பற்றி இரு தினங்களிற்கு முன் சவுதி பிரஸ் ஏஜென்ஸி தகவல் வெளியிட்டிருந்தது. கூட்டு தாக்குதல் படைகளின் பேச்சாளர் Ahmed al-Asiri இதனை ரியாத்தில் வைத்து தெரிவித்திருந்தார். “நாம் இதுவரை 1200 வான்தாக்குதல்களை யெமனின் பல பாகங்களிலும் உள்ள இலக்குகள் மீது மேற்கொண்டுள்ளோம். கடந்த மார்ச் 25 முதல் நேற்றுவரை நாம்பயங்கரவாதிகளையும் அவர்களது இலக்குகளையும் தாக்கியழித்துள்ளோம். எமது மிஷனில் நாம் பூரண வெற்றி கண்டு வருகிறோம்” என்பதே அவரது கூற்றாக இருந்தது. மேலும் அவர் கூறுகையில் “நாங்கள் Houthi பயங்கரவாதிகளை மட்டும் இலக்கு வைக்கவில்லை, முன்னாள் அதிபர் Ali Abdullah Saleh-இற்கு ஆதரவாக செயற்படும் யெமனிய இராணுவத்தையும் எமது தாக்குதல் முதன்மை இலக்காக கொண்டிருக்கின்றோம்” என்றார். தங்கள் தாக்குதலில் பாரிய இழப்புக்கள் எதிர்தரப்பிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களது முன்னேற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதமாக தெரிவித்திருந்தார். ஆனால் நிகழ்வுகள் சவுதி அரேபியாவின் வான் தாக்குதல்கள் எந்த பெறுமானங்களையும் ஏற்படுத்தவில்லை என்பதை உண்மைப்படுத்துகின்றன.

Thursday, April 9, 2015

மத்தியகிழக்கில் அமெரிக்கா நிறுவ முயலும் ஜனநாயகமும் ஆயுத விற்பனையும்..!


பாமா நிர்வாகம், 125 டாங்கிகள் செய்வதற்கு தேவையான உட்பொருட்கள், 12 F-16 போர் விமானங்கள்மற்றும் ஏவுகணைகளை அனுப்புவதில் இருந்து தொடங்கிஎகிப்திய இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆயுதங்கள் அனுப்புவதை அது மீண்டும் தொடங்கவிருப்பதாக செவ்வாயன்று அறிவித்ததுஎகிப்திய ஆட்சியாளர் ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல்-சிசி உடனான ஒரு தனிப்பட்ட தொலைபேசி உரையாடலில்இராணுவ உதவியாக ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் அனுப்புவதை மீண்டும் தொடங்குவதன் மீதும் ஒபாமா வாக்குறுதி அளித்தார்.

Wednesday, April 8, 2015

யர்மூக் முகாம் மோதல்களின் அடித்தளங்கள் !!

The United Nations has admitted that the Palestinian refugees are living under grave conditions and they are urging access to deliver much needed humanitarian aid.
ஸ்லாமிய அரசு (Islamaic State - IS) சிரியாவின் டமஸ்கஸ் நகர் அருகில் உள்ள பலஸ்தீன அகதிகள் வாழும் Yarmouk முகாமை ஓவர் ரன் பண்ணியுள்ளது. ஏறத்தாள 85 விகிதமான முகாமின் பகுதிகள் ஐ.எஸ். போராளிகள் வசம் வந்துள்ளது. ஹமாஸ் சார்பாளர்களுடன் நடந்த சண்டையில் சுமார் 100-இற்கும் அதிகமானவர்கள் மரணித்தும் காணாமல்போயுமுள்ளனர். ஐ.எஸ். போராளிகள் இரண்டு ஹமாஸ் சார்பாளர்களின் தலையை சீவி மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். யர்மூக் முகாமில் ஹமாஸின் அல்-கஸ்லாம் அணிகள் எதுவும் இருக்கவில்லை. முகாமை நிர்வகிக்கும் மற்றும் பின் தள வேலைகள் செய்யும் ஹமாஸ் போராளிகள் மட்டுமே அங்கிருந்தனர். ஹமாஸின் ஆதரவாளர்கள் நிறைந்த முகாம் என்பதனால் ஐ.எஸ். உடன் நிகழ்ந்த சண்டைகளில் பல குழுக்கள் சண்டையிட்டிருந்தன. இப்போது அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஸ்ஸாம் போராளிகளுடன் சண்டை இடம்பெறாமையினால் ஐ.எஸ். போராளிகளிற்கு வேலை இலகுவாக மாறியிருந்தது.