Monday, August 22, 2016

ரஷ்ய விமானங்களின் ஈரானிய தளங்கள் - எதற்காக?

சிரியாவிற்குள்ளான இலக்குகள் மீது தாக்குவதற்காக இரண்டாவது நாளாய் புதனன்று ஈரானின் வடமேற்கில் இருக்கும் ஒரு வான்தளத்தை ரஷ்யக் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தின. அந்த இலக்குகள், அலெப்போ நகரைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக சிரிய அரசாங்கத்தின் படைகளுடன் போரிட்டு வருகின்ற ஜிகாதிய குடிப்படைகளுக்கு ஆதரவான ஆயுதக் கிடங்குகளாகவும் உத்தரவு மையங்களாகவும் செயல்பட்டதாக ரஷ்யா விவரித்தது.

Wednesday, August 10, 2016

C.I.A. எதற்காக ஹிலாரி கிளிண்டனின் வருகையை விரும்புகிறது...!!

மைக்கல் மோரால். சீ.ஐ.ஏ.-யின் ஒரு முக்கிய முன்னாள் சீஃப் எக்ஸகட்டீவ் ஒபிசர். இரண்டு தசாப்தங்கள் வாஷிங்டனின் உயர்மட்ட பதவிகளில் இருந்ததுடன், 33 ஆண்டுகால அவரது தொழில்வாழ்விற்கு பின்னர் 2013 இல் சிஐஏ இல் இருந்து ஓய்வு பெற்றார். ஜோர்ஜ் டபிள்யூ புஷ் க்கான ஜனாதிபதியின் அன்றாட குறிப்புகள் தயாரிப்பதும் அவர் வேலைகளில் உள்ளடங்கும். அவர் துணை இயக்குனராக இருந்த மூன்று ஆண்டுகளின் போது நாளாந்தம் அந்த அமைப்பை செயல்படுத்தியதுடன், 2011 இல் மூன்று மாதங்களும் மற்றும் 2012-2013 இல் நான்கு மாதங்களுக்கும் செயல் இயக்குனராக இரண்டு பொறுப்புகளையும் வகித்திருந்தார்.

Tuesday, August 9, 2016

அமெரிக்காவின் லிபிய வேட்டை....!

மெரிக்க இராணுவ நடவடிக்கையின் பாகமாக லிபிய கடற்கரை நகரமான சிர்ட்டே மீது திங்களன்று தொடங்கிய அமெரிக்க விமானப்படை தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. பெயரளவிற்கு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) போராளிகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக இருந்தாலும், அமெரிக்க இராணுவவாதத்தின் இந்த புதிய தொடக்கம் மிக பரந்தளவில் அப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டதாகும்.

துருக்கிய இராணுவ சதிப்புரட்சியின் பின்.....


துருக்கியில் ஜூலை 15 ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியை ஒபாமா நிர்வாகம் ஆதரித்திருந்ததாக துருக்கிய அரசாங்கம் நம்புகின்ற நிலையில், அம்முயற்சியைத் தொடர்ந்து அங்காரா மற்றும் வொஷிங்டனுக்கு இடையிலான உறவுகள் வேகமாக சீர்குலைந்து வருகின்றன. அங்காராவில் குண்டுவீசி அழிக்கப்பட்ட ஒரு பொலிஸ் தளத்தின் இடிபாடுகளில் இருந்து வெள்ளியன்று வழங்கிய தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளில், துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அமெரிக்க அரசாங்கம் ஆதரித்ததாக நேரடியாக குற்றஞ்சாட்டினார்.  

Thursday, August 4, 2016

அதிபர் ஒபாமா பேசும் “அமெரிக்க மரபு”


புதன் இரவு பிலடெல்பியா நெஷனல் கொன்பிரன்ஸில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க அரசின் பாதுகாவலராக முன்னாள் அதிபரின் மனைவியும் முன்னாள் வெளியுறவு செயளருமான ஹிலாரி கிளிண்டனை இனங்காட்டியதோடு தான் பாதுகாத்த மரபை அவர் பாதுகாப்பார் என கருத்து தெரிவித்துள்ளார். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. அதிபர் பராக் ஹுஸைன் ஒபாமா எந்த “மரபை” அடுத்த அதிபரிடம் வழங்க ஆசைப்படுகிறார்?. ஜோர்ஜ் புஷ் எந்த மரபை ஒபாமாவிடம் விட்டு சென்றார்? என்பதே. 

Monday, August 1, 2016

"புர்ஹான் வானி" : காஷ்மீரிய விடுதலையின் நேற்றைய நாயகன்...!


ந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன் தான் புர்ஹான் வானி.

Sunday, July 31, 2016

இராணுவ சதியின் பின்னால் அமெரிக்க தளபதி........!


துருக்கிய ஜனாதிபதியான ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கி வீசுவதற்கும் கொலை செய்வதற்கும் ஒரு தோல்வியடைந்த இராணுவ சதி நடந்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர், துருக்கிய நாடாளுமன்றத்தின் மீது குண்டு வீசப்படுவதற்கும் 246 துருக்கிய குடிமக்கள் மரணமடைவதற்கும் இட்டுச் சென்ற குருதி கொட்டிய நிகழ்வுகளில் வலுவாய் அமெரிக்கா சம்பந்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டும் கூடுதல் விபரங்கள் மேலும் மேலும் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

Sunday, July 24, 2016

ரஷ்ய உளவமைப்பு வழங்கிய தகவல்களும் எர்டோகானின் தலைவிதியும்....!

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனைப் பதவியிலிருந்து தூக்கிவீசுவதற்கான கருச்சிதைக்கப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், முக்கியமாக இஸ்தான்புல் மற்றும் அங்காராவை உலுக்கிய அந்த இரத்தக்களரியான சம்பவங்களில் வாஷிங்டனின் கரம் இருந்தது என்பதில் அங்கே எந்த ஐயப்பாடும் கிடையாது.

Saturday, July 23, 2016

Gülen Movement - முஸ்லிம் இலுமினாட்டிகள்....!


துருக்கிய பாதுகாப்பு படையில் உள்ள மூன்றில் ஒரு பங்கினர். அதாவது 103 உயர்நிலை நட்சத்திர அந்தஸ்துள்ள ஜெனரல்கள், அட்மிரல்கள், எயார்மார்ஷல்கள். மூவாயிரத்திற்கும் அதிகமான நீதிபதிகள், ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான அரச உயர்நிலை சிவில் நிர்வாக அதிகாரிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டனர்.அமெரிக்காவினால். ஈராக்கை கைப்பற்ற முதலில் C.I.A. அதன் குடியரசு காவல்படையின் ஜெனரல்கள், ஏன் சதாம் ஹுஸைனின் இரு மகள்மாரை மணந்த மருமகன்கள் வரை விலை பேசி வாங்கியிருந்தது.

துருக்கியில் நிகழும் மாயஅலைகள்....!

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் புதனன்று மூன்று மாத கால அவசரகால நெருக்கடி நிலையை அறிவித்தார். இந்நகர்வுக்கு முன்னதாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து மணி நேர கூட்டம் ஒன்றும் எர்டோகனின் அமைச்சரவை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. தோல்வியடைந்த ஜூலை 15 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பொறுப்பான "நுண்கிருமிகளை" சகல அரசு துறைகளில் இருந்தும் களையெடுக்க சூளுரைத்துள்ள ஜனாதிபதி, “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு எதிரான அச்சுறுத்தலை போக்குவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் வேகமாகவும் திறமையாகவும் மேற்கொள்வதே நோக்கம்,” என்று அறிவித்தார்.

Thursday, July 21, 2016

துருக்கியில் என்ன செய்தார்கள்...?


க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வமான அரசை, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அரசை கிளற்ச்சி குழுவொன்று ஆட்சியில் இருந்து கவிழ்க்க முற்படும் போது உடனடியாகவே ஏனைய நாடுகள் அதனை கண்டிப்பதும் அந்த நாட்டிற்கான உதவிகளை வழங்க முற்படுவதும் இயல்பானது. ஆனால் துருக்கி ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று அது தோல்வியில் முடிந்த பின்னரும் அமெரிக்கா அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. தனது கண்டனத்தை வெளியிட அது நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. அவர்கள் கிளர்ச்சியாளர்களை அரசியல்ரீதியில் ஆதரித்தார்கள் என்பதிலும் அவர்களது வெற்றியை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதிலும் அங்கே எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

Wednesday, July 20, 2016

துருக்கிய இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் மறுபக்கம்...!

துருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்ச்சி தோல்வியில் முடிந்துள்ளது. அதற்கு விலையாக ஏறத்தாழ 300 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இராணுவ கிளற்ச்சி முறியடிக்கப்பட்ட விடயம் அந்நாட்டு அதிபரிற்கு கிடைத்த பெருவெற்றி போன்ற ஒரு தோற்றப்பாடு ஊடகங்களால் உருவாக்கப்பட்டுள்ள போதும் அந்த பிம்பத்தின் உறுதித்தன்மையில் கேள்விகள் எழுகின்றன. இராணுவ சதிப்புரட்ச்சியை சாக்காக கொண்டு அந்தநாட்டு ஆளும் வர்க்கம் புதிய வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் மேற்கொள்வதில் இப்போது குறியாக செயற்படுகிறது. அரசிற்கு சவாலாக எழுந்திருக்கும் சக்திகளை நசுக்குவதில் அரசு இப்போது முனைப்பாக செயற்பட்டு வருகிறது. இது உண்மையில் அரசியல் ஸ்திரமின்மையின் வடிவம்தான்.

Tuesday, July 19, 2016

பிரான்ஸிய அரசின் தேசியவாத படைக்கட்டமைப்பு....!

நீஸ் நகரில் பாஸ்டிய் தின மாலையில் கூட்டத்தின் மீது லொரியை ஓட்டி 84 பேர் மரணமடைவதற்கும் 100 பேர் காயமடைவதற்கும் காரணமாக இருந்த லாரியின் பிரான்ஸ்-துனிசிய ஓட்டுநர் முகமட் லாவுஇஜ் பூலெல் (Mohamed Lahouaiej Bouhlel) குறித்து முரண்பாடான தகவல்கள் தொடர்ந்து வெளிவருகின்ற நிலையில், பிரெஞ்சு அரசாங்கம் ஒரு பரந்த இராணுவ அதிகரிப்புக்கு அழுத்தமளித்துக் கொண்டிருக்கிறது.

Monday, July 18, 2016

நீஸ் தாக்குதல்களின் விடையிறுப்புக்கள்.....!

வியாழனன்று பின்னிரவில், பிரான்சின் தென்பகுதியில் இருக்கும் நீஸ் நகரில், பாஸ்டிய் தின (Bastille Day) கொண்டாட்டத்தின் சமயத்தில் ஒரு லாரி திட்டமிட்டு படுவேகமாக கூட்டத்திற்குள்ளாக புகுந்ததில், குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர். இந்த படுபயங்கரத் தாக்குதல்களில் இறந்தவர் எண்ணிக்கை நாள் முழுவதும் அதிகரித்தவண்ணம் இருந்து வருகிறது. பலியானவர்களில் சில குழந்தைகளும் இடம்பெற்றிருக்கின்றனர்.

Sunday, July 17, 2016

தென்சீனக்கடலில் மையம் கொள்ளும் போர்ப்புயல்.....!

சீ கடல் எல்லை உரிமைகளும் மற்றும் தென் சீனக் கடலில் தீவு கட்டமைப்பும் சட்டவிரோதமானவை என்று ஹேக் இன் ஐ.நா. தீர்ப்பாயம் செவ்வாயன்று ஒரு வெடிப்பார்ந்த தீர்ப்பை அறிவித்துள்ள நிலையில், 18 வது இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய-சீன உச்சி மாநாடு பெய்ஜிங்கிற்கு நெருக்கமாக அமைந்திருந்தது. அமெரிக்க-ஆதரவுடன் பிலிப்பைன்ஸ் தென் சீனக் கடல் மீது சீனாவிற்கு எதிராக தொடுத்திருந்த ஒரு வழக்கின் தீர்ப்புக்கும், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கும் இடையிலான முரண்பாடு மிகவும் கூர்மையாக இருந்தது.